ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம்

ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம்

Update: 2023-07-29 18:45 GMT

வேதாரண்யம்- நாகை சாலையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த கூடத்தை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், வக்கீல் நமசிவாயம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்