350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அந்தியூர் கிராமத்தில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Update: 2022-12-19 18:45 GMT

ரிஷிவந்தியம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் சமுதாய வளை காப்பு விழா ரிஷிவந்தியம் அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.கார்த்திகேயன் தலைமை தாங்கி 350 கர்ப்பிணிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். மேலும் இ்ந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளின் எடை மற்றும் உயரம் சரிபார்க்கப்பட்டதோடு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவர்களை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, ஆடிட்டர் சாமி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மரிய குழந்தை, வாசுகி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன், துணை தலைவர் சதீஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்