200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ராணிப்பேட்டை அருகே நடந்த சமுதாய வளைகாப்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

Update: 2022-10-01 18:45 GMT


ராணிப்பேட்டை அருகே நடந்த சமுதாய வளைகாப்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தங்கலில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, உணவுக் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்புகளையும், மதிய உணவையும் தனது சொந்த செலவில் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சத்தான உணவு

அண்ணா, கலைஞர் ஆகியோர் பொதுமக்களுக்கும், மகளிருக்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதனை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதனை நாம் செய்திட வேண்டும். அவருடைய செயல்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் ஒரு முன்மாதிரியாக உள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அயராது மக்கள் பணியாற்றி வருகிறார். அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சாரதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி செயலாளர் வினோத், துணைச் செயலாளர் ஏர்டெல் குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்