200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.;
ராணிப்பேட்டையில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் 200 கர்ப்பிணிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களும், மதிய உணவினையும் தனது சொந்த செலவில் வழங்கினார்.
முன்னதாக கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை கோலமாக வரைந்திருந்ததையும், ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுதலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக் குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.