150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கே.வி.குப்பத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-21 11:32 GMT

கே.வி.குப்பம் தாலுகாவில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சந்தைமேடு அருகில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார். வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் மைதிலி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.சீதாராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி முருகன், தாமோரவி, சசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்வதிவேலு, புஷ்பலதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி ஆகியோர் திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, நலங்கு வைத்து, வளையல்கள் அணிவித்து அட்சதைதூவி, அனைவருக்கும் புடவை உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அடங்கிய சீர் வரிசை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி ஊட்டச்சத்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்