100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Update: 2022-10-07 18:45 GMT

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். நாகைமாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு குறித்த கையேடும், 5 வகையான உணவும், சீர்வரிசை தட்டும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின்அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்