பேட்டை:
மானூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பேட்டையை அடுத்த நரசிங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வளைகாப்பு நிகழ்ச்சியில் 50 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். . மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர்.அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், பஞ்சாயத்து தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் மானூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜபிரியா, மேற்பார்வையாளர் குரூஸ் அந்தோனியம்மாள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.