சமுதாய வளைகாப்பு விழா

செங்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதையொட்டி 70 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது;

Update: 2022-10-20 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். குழந்தை வளா்ச்சித்துறை திட்ட அலுவலக கண்காணிப்பாளா் சாகுல்ஹமீது வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் 70 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளா் இருளப்பன், மேற்பார்வையாளா்கள் சிவகாமி, அண்ணாமலை மற்றும் பழனியம்மாள் வட்டார ஒருங்கிைணப்பாளா் உதயராணி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வட்டார உதவியாளா் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்