சமுதாய வளைகாப்பு விழா
நெல்லை தச்சநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தச்சநல்லூர் தனியார் மண்டபத்தில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 100-க்கும மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து, சந்தணம் பூசி, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு தாம்பூலத்தில் சீர் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான உணவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் மாலைராஜா, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.