இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியல்

கல்வராயன்மலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-04 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

நிலம் சீரமைப்பு

கல்வராயன்மலையில் உள்ள தாள்தொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆண்டி என்பவர் அவருடைய நிலத்தை சீரமைத்து வந்ததாகவும் அப்போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வெள்ளிமலை வனசரகர் தமிழ்செல்வன் விசாரணைக்காக ஆண்டியை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

சாலை மறியல்

இதை அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகி சின்னச்சாமி தலைமையில் மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியகுழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் கட்சியினர், மலைவாழ் மக்கள் வெள்ளிமலை-கருந்துறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண்டியை விடுதலை செய்ய வேண்டும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கரியலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்