இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.;
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்து இருந்தனர். சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மோகன், துணை செயலாளர்கள் ராமன், கந்தன், பொருளாளர் கண்ணன் தலைமையில் பலர் நேற்று சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு மத்திய அரசு வங்கி முன்பு கூடினர்.
தொடர்ந்து வங்கி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் வங்கியின் பிரதான வாசல் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்ததுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:-
180 பேர் கைது
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை. எனவே மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முயன்றோம்.
ஆனால் போலீசார் மறியல் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் வங்கி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் நடத்த முயன்ற 30 பெண்கள் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.