இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-13 19:23 GMT

ும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலன், மாநகராட்சி மண்டல உறுப்பினர்கள் சாமிநாதன், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவ.புண்ணியம் கலந்துகொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், அதானி குழுமத்தின் பல்லாயிரக்கணக்கான கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்