இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை புதிய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை புதிய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சரபோஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மணிப்பூர் மாநில மக்களை பிளவுபடுத்தக் கூடாது. மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.