இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் அமைதி திரும்ப வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கூடலூர்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கூடலூர் காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூடலூர் ஒன்றிய செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். பந்தலூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பழங்குடி மக்கம் சங்க அமைப்பாளர் மகேந்திரன், உசேன், தங்கராஜ், நாசர், கந்தசாமி, ராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர்.