இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
கொரடாச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ்.எம்.பி, மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப், ஒன்றியச் செயலாளர் கேசவராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொரடச்சேரி ஒன்றியம் செல்லூரில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். கொரடாச்சேரி, அம்மையப்பன், குழிக்கரை பகுதியில் அறுவடை செய்யும் நெல் பருவ மழையால் நனைந்தால்அதனை உலர்த்தும் வகையில் எந்திர உலர் ஆலை அமைக்க வேண்டும். கிராமப்புறத்தில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்திட வேண்டும். இந்த திட்டத்தினை நகர பகுதிக்கும் விரிவுபடுத்திட வேண்டும். இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தினை நாள் ஒன்றுக்கு ரூ.600 என உயர்த்தி வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு தொகையை விடுபடாமல் அனைத்து பகுதிக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.