தாலுகா அலுவலகத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் இளையரச னேந்தல் கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜிடம் மனு கொடுத்துவிட்டு அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.