இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்
சாத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சாத்தூர் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பத்மாவதி தலைமை வகித்தார். மணிமேகலை, மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் மருத்துவர் அறம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை, இலவச வீடு வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பழனிக்குமார், தாலுகா செயலாளர் சுவாமிநாதன், நகர செயலாளர் ஜான்ராஜா, முன்னாள் நகர செயலாளர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.