பெரம்பூரில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
பெரம்பூரில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதி நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு மற்றும் மததிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே . சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளம் சேகுவாரா , பெரம்பூர் பகுதி செயலாளர் கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.