கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாவட்டம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-05 19:15 GMT

சிவகாசி, 

மாவட்டம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூடலிங்கம், தாலுகா செயலாளர் ஜீவா, ரவி, ஜெயபால், முனியசாமி, கலைவாசன் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் சிவகாசி பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பாட்டத்தின் போது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

ராஜபாளையம்

அதேபோல செட்டியார்பட்டியில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்கியதை கண்டித்தும், தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஒன்றிய செயலாளர் கணேசன் மூர்த்தி, துணைச் செயலாளர் பகத்சிங், பொருளாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் சவுந்திரபாண்டியன், தாலுகா துணை செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பலவேசம் முன்னிலை வகித்தார். பொன்னுபாண்டியன் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய துணைச்செயலாளர் செல்வம் நகர துணை செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்