கோத்தகிரியில் பொருட்களின் தர நிர்ணய பயிற்சி முகாம்
கோத்தகிரியில் பொருட்களின் தர நிர்ணய பயிற்சி முகாம் நடந்தது.
கோத்தகிரி
இந்திய தர நிர்ணய கோவை மண்டல அலுவலகம் மற்றும் கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆகியவற்றின் சார்பில் கோத்தகிரியில் பொருட்களின் தர நிர்ணயம் குறித்து பயிற்சி முகாம் முகாமிற்கு நுகர்வோர் சங்கத்தின் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜன் அனைவரையும் வரவேற்றார். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி முகாமை தொடங்கி வைத்தார். கோவையைச் சேர்ந்த ஜெயராமன், இந்திய தர நிர்ணய அமைவன மேம்பாட்டு அலுவலர் ராஜீவ், நியமன அலுவலர் சுரேஷ், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேசினர். தொடர்ந்து இந்திய அரசு தரமான பொருட்களுக்கு வழங்கும் முத்திரைகள் குறித்தும், பொருட்களின் தரத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. பொதுமக்கள் தரமான பொருட்களை கண்டறிய, அதில் உரிய முத்திரை உள்ளதா என சோதித்துப் பார்த்து வாங்கிப் பயனடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முகாமில் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.