பழுதடைந்த சாலைகளை ஆணையாளர் ஆய்வு

பழுதடைந்த சாலைகளை ஆணையாளர் ஆய்வு

Update: 2022-10-16 12:45 GMT

திருப்பூர்

திருப்பூர் மாநகரில், கழிவுநீர் கால்வாய் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பல்வேறு புதிய சாலைகள் சீரமைப்பு பணிகள், மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிக்காக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேயர் தினேஷ்குமார், மழைக்காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி 3-வது மற்றும் 4-வது மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டை நகர், கே.எம்.ஜி.நகர், ஏ.பி.டி.ரோடு, மங்கலம் ரோடு, ஹரேராமா ஹரே கிருஷ்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் மற்றும் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி நேற்று ஆய்வு செய்தார்.

சாலை சீரமைப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் விழா காலங்களில் சிரமமின்றி செல்லும் வகையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொறியாளர்கள், அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.

---

Tags:    

மேலும் செய்திகள்