போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு
சேலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீரென ஆய்வு செய்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், பள்ளப்பட்டி, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் மற்றும் சேலம் டவுன் போலீஸ் நிலையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது குற்றவாளிகளை கையாள்வது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ள அறிவுரைப்படி நடந்து கொள்ளவும், போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க வந்தால் கனிவாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீதான குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரரவிட்டார்.
இந்த ஆய்வின் போது துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), மாடசாமி (வடக்கு), உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.