பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு

சேத்துப்பட்டில் பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு

Update: 2022-05-21 17:02 GMT

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு சிறப்பு பேரூராட்சியில் திட்டப்பணிகள் மற்றும் புதிய பணிகளை சென்னை மாநில பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது சேத்துப்பட்டு காமராஜர் பஸ் நிலையத்தை பார்வையிட்டார். பஸ்கள் நிற்கும் இடங்களுக்கு என்னென்ன ஊருக்கு பஸ் செல்ல வேண்டும். அந்த ஊர்கள் பெயர்கள் அந்தந்த இடத்தில் எழுத வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும்.

மேலும் காமராஜர் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வழியில் உள்ள பழுதடைந்த குடிநீர் குழாயை சீர் செய்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். துளசி ராமர் குளத்தின் சுவர்கள் சேதமடைந்து, சீர் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வேலூர் திருவண்ணாமலை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா மற்றும் பேரூராட்சியின் அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் வைத்தியலிங்கம், இளநிலை பொறியாளர் சம்பத், உதவியாளர் பிச்சாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்