சேதம் அடைந்த பகுதிகளை சர்க்கரைத்துறை ஆணையர் ஆய்வு

அம்முண்டி சர்க்கரை ஆலையில் தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளை சர்க்கரைத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-06 17:22 GMT

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சர்க்கரை ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கரும்பு சக்கை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பகுதிக்கு கரும்பு சக்கை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது.

இந்த நிலையில் நேற்று சர்க்கரைத்துறை ஆணையர் விஜய ராஜ்குமார் மற்றும் தலைமை சர்க்கரை பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் தீயில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தீயில் சேதம் அடைந்த பொருட்களுக்கான காப்பீடு பெறுவதற்கு ஆவணங்களை தயார் செய்யுமாறும், வரும் ஆண்டில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க சர்க்கரை ஆலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்