புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை ஆணையர் ஆய்வு

புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-09 18:42 GMT

அரியலூர் நகராட்சி சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு, ரூ.7.5 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி அங்கிருந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டது. தரைத்தளத்தில் உள்ள கான்கிரீட் பெயர்த்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி ஆய்வு செய்தார். மேலும், பஸ்சுக்காக பயணிகள் அண்ணா சிலை அருகே அதிக அளவில் காத்திருப்பதால், அவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. இதனால் புதிதாக கட்டப்படும் பஸ் நிலைய நுழைவு வாயில் அருகில் உள்ள பழைய கழிப்பிடத்தை இடிக்காமல், தற்காலிகமாக அதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்து, அங்கு செல்லும் வழியை ஏற்படுத்தி தர பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயணிகள் மிகவும் பயனடைவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்