ரூ.3 கோடியே 41 லட்சத்தில் வணிக வளாகம்

பழனி பஸ்நிலையத்தில் ரூ.3 கோடியே 41 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-06-08 19:00 GMT

பழனி பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாக கட்டிடம் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் அதை இடித்து அகற்றிவிட்டு ரூ.3 கோடியே 41 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ்நிலைய பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி, ஆணையர் (பொறுப்பு) வெற்றிசெல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார், தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்