10-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடக்கம்

சிவகாசி அருகே 10-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடங்கியது.

Update: 2022-06-29 18:54 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நேற்று புதிதாக 10-வது அகழாய்வுகுழி தோண்டப்பட்டது. பண்டைய காலத்தில் கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், ஏராளமான மண்பானைகள், சுடுமண் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான பானைகள் கிடைத்துள்ளன. சங்கு வளையல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கருவி, சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் மூடிகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த குழிகள் 7 அடி முதல் 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து குழிகள் தோண்டுவதற்கு விரைவில் தயார் நிலையில் இருப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்