கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா

சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நடந்தது.

Update: 2022-09-15 18:45 GMT

ஆலங்குளம்:

நெல்்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் தொடக்க விழா நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அ.மதிவாணன் தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஆர்.வேலாயுதம் முன்னிலை வகித்தார். முதலாம் ஆண்டு துறை தலைவர் எஸ்.மைதிலி வரவேற்று பேசினார்.

கல்லூரியின் கல்வி செயல் திறன்கள் பற்றி கணிப்பொறியியல் துறை மாணவர் எஸ்.ஹரிஹரசுதனும், கல்லூரியில் கல்வி கற்பிக்கும் முறை, வேலைவாய்ப்புகள் பற்றி மின்னணுவியல் தகவல் தொடர்பு துறை மாணவி ஆர்.தனலட்சுமியும், கல்லூரியில் விளையாட்டு போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி மின், மின்னணுவியல் துறை மாணவர் ஜெ.விஜய்யும் பேசினர்.

கல்லூரி செயலாளர் பேராசிரியர் எழில்வாணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்புடன் தொலைநோக்கு பார்வையுடனும், சமுதாய சிந்தனையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார். கட்டிடவியல் துறைத்தலைவர் குளோரி செல்வமனோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர் மைதிலி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்