காரியாபட்டியில் விரைவில் ஆட்டுச்சந்தை

காரியாபட்டியில் விரைவில் ஆட்டுச்சந்தை அமைக்கப்படும் என பேரூராட்சி தலைவர் செந்தில் கூறினார்.;

Update:2023-01-22 00:32 IST

காரியாபட்டி

காரியாபட்டியில் விரைவில் ஆட்டுச்சந்தை அமைக்கப்படும் என பேரூராட்சி தலைவர் செந்தில் கூறினார்.

காய்கறி சந்தை

காரியாபட்டி மற்றும் அதனை சுற்றி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் முற்றிலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு காரியாபட்டிக்கு தான் வருகின்றனர்.

விவசாயிகள் தங்களது வீடுகளில் அதிகமாக ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை விற்பனை செய்ய வேண்டுமானால் தோனுகால், அருப்புக்கோட்டை, திருமங்கலம், வீரசோழன் ஆகிய ஊர்களுக்கு வேன் மூலம் செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது.விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளையும் வெளியூருக்கு சென்று விற்பனை செய்கின்றனர். ஆனால் காரியாபட்டி பெரிய நகரமாக இருந்தும் ஆட்டுச்சந்தை, காய்கறி சந்தை போன்றவை இல்லாமல் இருந்து வருகிறது.

ஆய்வு

இதனால் காரியாபட்டியில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை, காய்கறி சந்தை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், துணைத்தலைவர் ரூபி சந்தோசம், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிகுமார், கே.செவல்பட்டி கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் காய்கறி மற்றும் ஆட்டுச்சந்தை அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் கூறியதாவது:- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விரைவில் காரியாபட்டியில் ஆட்டுச் சந்தை மற்றும் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்