நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் உடல் நலக்குறைவால் காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Update: 2023-08-28 07:03 GMT

சென்னை,

நகைச்சுவை ஜாம்பவானான வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து ரசிக்காதவர்களே இல்லை. தனது உடல்மொழி. நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை சிரிக்க வைப்பார் வடிவேலு.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், ஆல் டைம் பேவரைட் நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலுதான். நகைச்சுவையில் கலக்கி வந்த வடிவேலு, தான் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணசித்திர நடிகர் என்பதை மாமன்னன் படத்தில் நடித்து நிரூபித்து விட்டார்.

இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்திருந்தார். தொடர்ந்து  சந்திரமுகி முதல் பாகத்தில் முருகேசனாக நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்திலும் நடித்து உள்ளார். இத்திரைப்படம் விநாயர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியாக உள்ளதால், பிரோமோஷன் வேலையில் வடிவேலு பிஸியாக இருக்கிறார்

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் இன்று காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்