அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த முகாம்

காளத்திமடம் கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த முகாம் நடந்தது.

Update: 2022-10-28 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் குத்தப்பாஞ்சன் பஞ்சாயத்து காளத்திமடம் கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஆகாஷ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையையும், 5 பயனாளிகளுக்கு விதவை ஓய்வூதியத்திற்கான ஆணையையும் வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு மானியத்தில் விவசாய கருவிகளும் வழங்கப்பட்டது.

மேலும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு வங்கி மூலம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 518 பயனாளிகளுக்கு தலா 2 மரக்கன்றுகள் வீதம் 1000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், உதவி பொறியாளர்கள் ஹெல்வின், பூச்செண்டு, உதவி மகளிர் திட்ட அலுவலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பசுபதிதேவி திராவிடமணி, ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் குத்தப்பாஞ்சன் பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்