தடுப்பு சுவரில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்ற வாலிபர் பலி

திருமுல்லைவாயல் அருகே மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-03 08:05 GMT

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் அஜய் (வயது 20). இவர், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து பட்டரைவாக்கத்தில் இருந்து அந்த வழியாக வந்த பட்டாபிராம் தென்றல் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் (19) என்பவரது மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்றார்.

திருமுல்லைவாயல் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி அருகில் இருந்த முட்புதரில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த யோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்