மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-11-06 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை காலனி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது48). தொழிலாளி.இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே கொல்லைக்காட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரேம்குமார் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்