மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிகிச்சை பலனின்றி பெண் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிகிச்சை பலனின்றி பெண் சாவு

Update: 2022-12-06 18:45 GMT

நெகமம்

பொள்ளாச்சி மாப்பிள்ளை கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முகமது ரஜீத்(வயது 52). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ரஜியம்மாள்(48). கணவன்-மனைவி 2 பேரும், கடந்த 3-ந் தேதி பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது ரஜீத் ஓட்டினார்.

நெகமம்-காட்டம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது முகமது ரஜீத் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முகமது ரஜீத், ரஜியம்மாள் ஆகியோரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சேரிமலை ஓடக்கல்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ்(60) என்பவரை பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரஜியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்