மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

Update: 2023-06-27 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

திருமருகல் ஒன்றியம் போலகம் கூத்தப்பட்டார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அசோக் (வயது 23). இவர் காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அசோக் வழக்கம் போல் வீட்டில் இருந்து காரைக்காலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது காரைக்கால் முருகராம் நகரை சேர்ந்த ராமேஸ்வரன் மகன் ஆனந்தராஜ் என்பவர் காரைக்காலில் இருந்து திட்டச்சேரி நோக்கி எதிரே வந்துகொண்டிருந்தார்.

வாலிபர் பலி

அப்போது வாழ்மங்கலம் அருகே வந்தபோது எதிர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த அசோக் மற்றும் ஆனந்தராஜ் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அசோக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்