மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு

முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் இறந்தார்.

Update: 2023-03-27 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34). இவர் வெளிநாட்டில் ேவலை பார்த்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் கோடரேந்தல் கிராமத்தில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது எதிரே வந்த கருமல் கிராமத்தை சேர்ந்த ராசையா(60), மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராசையா முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்