மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம்
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம் அடைந்தனர்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டர்
புதுக்கடை அருகே உள்ள கூட்டவிளையை சேர்ந்தவர் பிரடரிக் பொன்குமார் (வயது52). இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். தற்போது நீரோடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று பணி முடிந்து இவரும் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள நெல்சனும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பார்த்திபபுரம் -பைங்குளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே புதுக்கடை பகுதியை சேர்ந்த மனோஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரடரிக் பொன்குமார், நெல்சன், மனோஜ் ஆகிய 3 பேர்களும் படுகாயம் அடைந்தனர்.
விசாரணை
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.