மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார்.;

Update: 2023-01-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

ஊத்துமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 47). இவர் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் வழியாக சிவகாசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

சங்கரன்கோவில் அருகே கல்லத்திகுளம் பகுதியில் வரும்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மாடசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்