சூளகிரி:-
சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). விவசாயி. சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், கணேசன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.