மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார்.

Update: 2022-07-25 18:39 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே புலியூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கீரனூருக்கு வந்து கொண்டிருந்தார். நல்லதங்காள் பட்டி அருகே வந்த போது, மேல நாஞ்சூரை சேர்ந்த ஆண்டனி கிளிண்டன் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதமாக, மாரிமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் மாரிமுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஆண்டனியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்