கல்லூரி ஆசிரியை தற்கொலை

கல்லூரி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-09 18:45 GMT

சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் நாராயணன். இவரது மனைவி சினேகாபிரியா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சினேகா பிரியா பூவந்தியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று சினேகா பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்