சர்வதேச சைக்கிள் தினத்தில் பழுதடைந்த சைக்கிள்களை மிதித்த கல்லூரி மாணவர்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் தின பேரணியில் மாணவர்களுக்கு பழுதடைந்த சைக்கிளை கொடுத்து மிதிக்க சொன்னதால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
மாமல்லபுரம்:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகத்தில் சைக்கிள் பேரணி நடந்தது.
இந்நிலையில் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற சைக்கிள் பேரணியில் டயரில் காற்றில்லாத சைக்கிள்கள், பெடல்கள் இல்லாத சைக்கிள்கள் என பழுதடைந்து போன பழைய சைக்கிள்களை கொடுத்து 5 கி.மீ தூரம் மிதிக்க கூறியதால், தன்னார்வல சேவைக்கு வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் வெயிலில் சைக்கிள் மிதித்து கடும் அவதிக்கு ஆளானார்கள்.