கல்லூரி மாணவி இறந்த வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது

கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார்.

Update: 2024-04-23 01:15 GMT

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில்  படித்து வந்தார். இவர் ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியை சேர்ந்த கிஷோர் (25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார். கடந்த 20-ந் தேதி கிஷோரும், ஜெய்ஸ்ரீயும் நண்பரின் வீட்டு மாடியில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்ஸ்ரீ திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெய்ஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்