மனு கொடுக்க வந்த கல்லூரி மாணவிகள்

கல்வி உதவித்தொகை கோரி கல்லூரி மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.;

Update:2023-10-17 00:15 IST

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து முடித்த மாணவிகள் பலர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் பரமக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 10-வது, பிளஸ்-1, பிளஸ்-2 படித்து முடித்து தற்போது அரசு கல்லூரியில் படித்து வருவதாகவும், பிளஸ்-2 முடித்த பிறகு தாங்கள் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும் பிளஸ்-2 முடிந்த பிறகு தங்களது வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ஆனால் இதுவரை வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை வரவில்லை. இதனால் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு வருவதாகவும் அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை தங்களுக்கு கிடைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்