கல்லூரி மாணவர் தற்கொலை
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஆலங்குளம்:
சீதபற்பநல்லூர் அருகே உள்ள வடுகன்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜ் மகன் அன்பு குமார் (வயது 19). இவா் நெல்லை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அன்பு குமார் தினமும் நீண்ட நேரமாக செல்போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த வனராஜ், அன்பு குமாரை கண்டித்து சத்தம் போட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அன்பு குமார் வீட்டு மாடியில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பூச்சி மருந்து குடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டிற்கு வந்த நண்பர்கள், வனராஜிடம் கூறியுள்ளனர். உடனே மாடியில் மயக்க நிலையில் இருந்த அன்புகுமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்பு குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.