கல்லூரி மாணவி தற்கொலை
ராஜபாளையம் அருேக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவருடைய மகள் திவ்யா (வயது 18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் பருவத்தேர்வில் சரியாக படிக்கவில்லை என தனுஷ்கோடி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.