காரைக்குடி
திருவாடானை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உதய பாரதி (வயது 18). இவர் காரைக்குடியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் ஓய்வு நேரத்தில் சாமியார் தோட்டம் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உதய பாரதி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.