கல்லூரி மாணவி தற்கொலை

சிறுபாக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-28 18:45 GMT

சிறுபாக்கம், 

சிறுபாக்கம் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ரவிக்கிருஷ்ணன் (வயது 55). இவரது மகள் பரணி (23). இவர் திருப்பூரில் தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பரணி, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பரணி, விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி, பரணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்