ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள குத்துக்கல்வலசை தெற்கு மேதலோடை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகள் யோகோவா (வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு லேப் டெக்னீசியன் படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த யோகோவா நேற்று முன்தினம் அப்பகுதியில் வயல்காட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.