கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

Update: 2022-11-30 18:52 GMT

குளித்தலை அருகே உள்ள கருங்கலாலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் ஹேமா (வயது 17). இவர் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஹேமாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்